அறநூல்கள்
ஆத்திசூடி
1. அறஞ்செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலகேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண்ணெழுத் திகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐய மிட்டுண்
10. ஒப்புர வொழுகு
11. ஓதுவ தொழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகம் சுருக்கேல்
14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப்போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட வுரை
18. இடம்பட வுரை
19. இணக்கமறிந் திணங்கு
20. தந்தை தாய்ப்பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர்செய்
23. மன்ரு பறித்துண்ணேல்
24. இயல்பலா தனசெயேல்
25. அரவ மாட்டேல்
26. இலவம் பஞ்சிற்றுயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகலாதன செயேல்
29. இளமை யிற்கல்
30. அறனை மறவேல்
31. அனந்த லாடேல்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் படவாழ்
35. கீழ்மை யகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்ப தொழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட் டொழி
43. சக்கர நெறிநில்
44. சான்றோ ரினத்திரு
45. சித்திரம் பேசேல்
46. சீர்மை மறவேல்
47. சுளிக்கச் சொல்லேல்
48. சூது விரும்பேல்
49. செய்வன திருந்தச்செய்
50. சேரிட மறிந்துசேர்
51. சையெனத் திரியேல்
52. சொற்சோர்வு படேல்
53. சோம்பித் திரியேல்
54. தக்கோ னெனத்திரி
55. தானமது விரும்பு
56. திருனாலுக்கடிமை செய்
57. தீவினை யகற்று
58. துன்பத்திற் கிடங்கொடேல்
59. தூக்கி வினைசெய்
60. தெய்வ மிகழேல்
61. தேசத்தோ டொத்துவாழ்
62. தையல் சொற்கேளேல்
63. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல்
65. நன்மை கடைப்பிடி
66. நாடொப் பனசெய்
67. நிலையிற் பிரியேல்
68. நீர்விளை யாடேல்
69. நுண்மை நுகரேல்
70. நூல்பல கல்
71. நெற்பயிர் வினன
72 நேர்பட வொழுகு
73. நைவினை நுணுகேல்
74. நொய்ய வுரையெல்
75. நோய்கிடங் கொடேல்
76. பழிப்பன பகரேல்
77. பாம்போடு பழகேல்
78. பிழைபடச் சொல்லேல்
79. பீடுபெற நில்
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்
81. பூமி திருத்தியுண்
82. பெரியாரைத் துணைக்கொள்
83. பேதைமை யகற்று
84. பையலோ டிணங்கேல்
85. பொருள்தனைப் போற்றிவாழ்
86. போர்தொழில் புரியேல்
87. மனந் தடுமாறேல்
88. மாற்றானுக் கிடங்கொடேல்
89. மிகைபட சொல்லேல்
90. மீதுண் விருப்பேல்
91. முனைமுகத்து நில்லேல்
92. மூர்க்கரோ டிணங்கேல்
93. மெல்லினல்லாள் தோள்சேர்
94. மேன்மக்கள் சொற்கேள்
95. மைவிழியார் மனையகல்
96. மொழிவ தறமொழி
97. மோகத் தைமுனி
98. வல்லமை பேசேல்
99. வாதுமுற் கூறேல்
100. வித்தை விரும்பு
101. வீடு பெறநில்
102. உத்தம னாய்ரு
103. ஊருடன் கூடிவாழ்
104. வெட்டெனப் பேசேல்
105. வேண்டி வினைசெயேல்
106. வைகறைத் துயிலெழு
107. ஒன்னாரைத் தேறேல்
108.ஓரஞ் சொல்லேல்
கொன்றை வேந்தேன்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயந் தொழுவது சாலவும் நன்று
3. இல்லற மல்லது நல்லற மன்று
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்துங் கண்ணெனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினுஞ் செய்வன செய்
10. ஒருவனப் பற்றி ஓரகத் திரு
11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு
13. அஃகமுங் காகஞ் சிக்கெனெத் தேடு
14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை
15. காவல் தானே பாவையர்க் கழகு
16. கிட்டா தாயின் வெட்டென மற
17. கிழோ ராயினுந் தாழ வுரை
18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை
19. கூரம் பாயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
23.
Labels: aathichudi, aathisudi, Avaiyaar, ஆத்திசூடி, ஔவையார்
1 Comments:
sorry sivakumar avargale..romba lateaa reply panren.
aathichoodiya nichyama sethu ezhudharen..
point pannadhukku nandri.. ippo koncham busy..koodiya seekram in a month or two maatharen!!
thanks
Post a Comment
<< Home